தாம்பரம் செங்கல்பட்டு உயர்மட்ட பாலப்பணி நிறுத்த முடிவு

தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் சந்திப்பிலிருந்து காட்டாங்குளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஆறு வழிச்சாலையாக சுமார் […]

தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் சந்திப்பிலிருந்து காட்டாங்குளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஆறு வழிச்சாலையாக சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது 3523 கோடி செலவில் பெருங்களத்தூரில் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்க கட்டணம் வசூலிக்கும் நிலையின் காரணமாக இந்த திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக ஜிஎஸ்டி சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிளாம்பாக்கம் அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பால பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu