மத்திய அரசு நடிகர் மாதவனை இந்தி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைவராக நியமித்திருக்கிறது.
புனேவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமானது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன் தலைவராக நடிகர் மாதவன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இவருக்கு மத்திய மந்திரி அனுராக் தாகூர் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் "உங்களின் முந்தைய அனுபவ மற்றும் கடுமையான தொழில் தருமம் ஆகியவை இந்த நிறுவனத்திற்கு பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு நிறுவனத்தை மென்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பாராட்டியுள்ளார்.