சிகாகோவில் 2 நிறுவனங்கள் உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா அரசு அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்க, சான் பிரான்சிஸ்கோவிற்குச் சென்றுள்ளார். அங்கு, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார், இதனால் 4,600 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கும் மற்றும் 20 லட்சம் இளைஞர்களுக்கான பயிற்சிக்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிகாகோவில் அஷ்யூரண்ட் மற்றும் ஈட்டன் நிறுவனங்களுடன் புதிய முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.