பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக காங்கிரஸ்

March 26, 2024

தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஏற்கனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்கே விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

தமிழக காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஏற்கனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதன்படி திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்கே விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். விளவங்காடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu