தமிழக அரசு கூட்டுறவு செயலி மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவுத் துறை குறைந்த வட்டி வீதத்தில் பயிர், மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த ஆண்டு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 'கூட்டுறவு' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், இணைய வழியாக கடன் விண்ணப்பம் செய்து, தேவையான தகவல்களை பெற முடியும். அதிகபட்சம் ரூ.75 லட்சம் வீட்டுக் கடனும் 8.5% வட்டியில் 20 ஆண்டுகள் வரை கிடைக்கும்