இலங்கை கடற்படை கப்பல் மோதி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சதீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது. இதனை அடுத்து மீனவர்கள் அவர்களுக்கு அஞ்சி திரும்பிய போது கார்த்திகேயன் என்பாரின் விசைப்படகு மீது இலங்கை படகு மோதியது. இதில் அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் கொல்லப்பட்ட மீனவருக்கு நீதி வேண்டும்,
இலங்கை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இலங்கை அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் இந்தியா, இலங்கை அரசு நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என இந்தியா கோரியுள்ளது.