முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி ஏற்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனை தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீண்டும் எம்.எல்.ஏவாகியுள்ளார் இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவரை அமைச்சராக பதவி பிரமாணம் செய்ய கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதினார்.ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து இதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் தமிழக அரசு பொன்முடி அமைச்சர் பதவி விவகாரத்தில் ஆர்.என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அமைச்சர் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உத்தரவிடக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.