தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என தமிழகத்தின் மின் தேவை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் தேவைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மாநிலத்தின் மின் தேவை 20583 மெகாவாட் ஆகவும் மின் பயன்பாடு நான் 451.79 மில்லியன் யூனிட் ஆகவும் பதிவாகி கடந்த ஆண்டின் உச்சத்தை கடந்தது.
மேலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மின் தேவை அதிகரித்து வந்தது. தற்போது இதுவரை இருந்ததை விட மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து சீரான மின்விநியோகத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உறுதி செய்து வருவதாகவும் அதன்படி எப்போதும் இல்லாத வகையில் நேற்று 20 ஆயிரத்து 701 மெகாவாட் ஆகவும் மின் நுகர்வு 454.32 மில்லி யூனிட்டுகளாகவும் உயர்ந்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.