மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடம்

January 18, 2024

வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு தகுந்த சூழலை தருவதில் மிகச்சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. புத்தக நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தரும் திட்டங்களை நடைமுறை படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பிற்கான (டிபிஐஐடி) துறை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட 25 காரணிகள் ஆய்வு […]

வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு தகுந்த சூழலை தருவதில் மிகச்சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

புத்தக நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி தரும் திட்டங்களை நடைமுறை படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பிற்கான (டிபிஐஐடி) துறை வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட 25 காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மிகச்சிறந்த மாநிலங்கள்,சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் என தர வரிசைப்படுத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 33 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களும் பங்கேற்றுள்ளன. இதில் மிக சிறந்த மாநிலங்களாக குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலப் பிரதேசமும், சிறந்த மாநிலங்களாக மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா அருணாச்சலப் பிரதேசம், மேகலாயா ஆகியவையும், முதன்மை மாநிலங்களாக ஆந்திரா,அஸ்ஸாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூ,ர் திரிபுரா ஆகியவையும்,ஆர்வம் காட்டும் மாநிலங்களில் பீகார், அரியானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், நாகலாந்து ஆகியவையும், முன்னேற்றம் கண்டுவரும் மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர், டெல்லி, ஜம்மு காஷ்மீர், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu