தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் செப். 5-ல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் செப்டம்பர் 5-ல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்கீழ் 35,000 ரேஷன் கடை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஈடுபடப்போகிறார்கள் என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் அறிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.