உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம்

ஜூலை மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் ஆயிரம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் […]

ஜூலை மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் ஆயிரம் செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. அதன்படி நேற்று சென்னையில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். அதில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது. அதன் காரணமாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு முதல் உயர் கல்வி செல்லும் அரசு மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் அரசுப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu