தமிழ் அறிஞர்களிடம் இருந்து திருவள்ளுவர் விருது மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான 74 விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு தமிழுக்கும், தமிழ் மொழி பண்பாட்டு வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு பல்வேறு சிறந்த விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில் 2023 ஆண்டிற்கான 74 விருது மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதிற்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளுவர் நாள் விருதுகள் அடிப்படையில் 2 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை பொன்னாடை ஆகியவை திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திருவிக விருது, கி.ஆ.பெ விசுவநாதம் விருது, காமராஜர் விருது அண்ணா விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.5 லட்சம், ஒரு பவுன் தங்க பதக்கம், தகுதியுரை பொன்னாடை ஆகியவை இலக்கிய மாமணி விருது பெறும் மூன்று பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழ்த்தாய் விருது பெறுபவர்க்கு ரூபாய் 5 லட்சத்துடன் கேடையமும், தகுதியுரையும் வழங்கப்படும். கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பன் விருது, சொல்லின் செல்வர் விருது, மற்றும் பல விருதுகள் பெறுபவர்களுக்கு ரூபாய் 2 லட்சம், தங்கப்பதக்கம் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுதும் (38) தலா ஒருவருக்கு தமிழ் செம்மல் விருதுடன் ரூபாய் 25 ஆயிரம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகின்றன. மொத்தம் 75 நபர்களுக்கு விருது அளிக்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதியானவர்கள் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர்,சென்னை 600 008 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.