தமிழ் வளர்ப்பு

தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை […]

தமிழ் என்ற மொழி நம்மை தாயாக இருந்து தாலாட்டியது. நம் வாழ்க்கையை கற்றுக் கொள்ள பேருதவி செய்தது. தமிழால் நாம் வளர்ந்தோம். ஆனால் ஒரு மொழி எப்படி தாயாக இருந்து வழிநடத்துமோ, அதுவே காலமாற்றத்தினால் தடுமாறி கீழே விழவும் கூடும். அந்த சமயத்தில் தமிழர்கள் அனைவரும் தமிழை ஒரு குழந்தையாக மடியில் ஏந்தி வழிநடத்த வேண்டும். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டிய தமிழ், காலத்திற்கேற்ப நடைபோட பாதை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆம். ஒரு மொழியை வளர்ப்பது ஒரு குழந்தையை வளர்ப்பது போன்ற பொறுப்புகள் நிறைந்தது.

பல நூறு ஆண்டுகளாய் இந்த பொறுப்பு நம் முன்னோர்களால் சிறப்பாக செய்யப்பட்டு, இப்போது வழி வழியாய், நம்மை சேர்ந்திருக்கிறது.

தமிழ் வளர்த்த கதை

தமிழ் மொழி இத்தனை ஆண்டுகளாய் இளமையோடு இருப்பதற்கு, ஒவ்வொரு காலத்திலும் அதனை சீரமைத்து வளர்த்த தமிழர்களே முக்கிய காரணம். தமிழ் சிறிய செடியாக இருந்து பெரும் மரமாக வேரூன்றி வளர்ந்த விதத்தை 3 பிரிவுகளாக அறியலாம்.

1. தமிழின் ஒளி வடிவம்

ஒரு மொழி ஒலியில் இருந்து உருவாகிறது. ஆதிமனிதன் பல ஒலிகளை கோர்த்து மொழியை உருவாக்கினான். உலகில் மனிதன் உருவாகிய மூத்த மொழி தமிழ். வெறும் ஒலிகளை மட்டுமே கொண்டு ஒரு மொழி பல்லாயிரம் ஆண்டுகள் வாழமுடியாது. அவற்றுக்கு ஒளி வடிவம் தேவை. நம் முன்னோர்கள், தமிழுக்கு எழுத்துகள் உருவாக்கி ஒலி ஒளி அமைத்து தலைமுறைகள் தாண்டி வாழ வழிவகுத்தனர். பாறைகளில் ஒளி வடிவம் பெற்ற மொழி, நாகரிகம் வளர வளர, ஓலைகளுக்கு மாறும் பொழுது எழுத்து வடிவத்தில் மாற்றம் கொண்டு வந்தனர். அந்த மாற்றம் தமிழை பாறைகளில் தேங்கி விடாமல் தடுத்தது. மொழி வளர வளர இளமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஓலைகளில் இருந்து அச்சு ஊடகத்திற்கு மனிதன் முன்னேறுகிறான். தமிழை ஓலைச்சுவடிகளில் ஒடுக்கிவிடாமல், எழுத்துகளை எளிமையாக்கி, தமிழை அச்சில் ஏற்றி அழகு பார்த்தான் தமிழன். சென்ற நூற்றாண்டு வரையிலும் தமிழின் எழுத்துருவாக்கம் நிகழ்ந்து வந்திருக்கிறது.

2. தனித்தமிழ் இயக்கம்

நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர பல தேசத்து மக்களுடன் உறவுகள் அமைகின்றது. மேலும் பிற மொழியைச் சேர்ந்த அரசர்கள் தமிழ் மண்ணை ஆளுகின்றனர். அவ்வேளையில், பிற நாட்டில் இருந்து வந்த புதிய பொருட்களை அந்தந்த நாட்டு மொழியிலேயே தமிழன் வழங்கினான். நாளடைவில் பிற மொழியின் ஆதிக்கத்தால் தமிழின் செழிப்பு அழிக்கப்படுகிறது. மனித வரலாற்றில் தமிழைப் போலவே ஒவ்வொரு மொழியும் இந்த நிலைமையை எதிர்கொண்டது. பிற மொழிக் கலப்பை சிறப்பாக கையாண்டு, தமிழை அழிவில் இருந்து நம் முன்னோர்கள் காப்பாற்றினார்கள். தனித்தமிழ் இயக்கங்கள் உருப்பெற்றன. அவை பிறமொழிக் கலப்புகளால் தமிழ் தன் சுயத்தை இழந்து விடாமல் பாதுகாத்து, தமிழின் அடையாளத்தை மீட்டெடுத்தது.

3. மொழியும் அறிவும்

மனிதன் ஒரு பொருளைப் பற்றி அறிய மொழி அவசியம். மொழியின் வாயிலாகவே ஞானத்தை அடைய முடியும். அதனால் ஒரு மொழி மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளைப் பற்றிய அறிவை போதிக்க வேண்டும். உதாரணத்திற்கு, சமஸ்கிருத மொழி ஆன்மிகம் என்ற ஒரு துறையை மட்டுமே சார்ந்திருந்தது. அதனாலேயே பிற துறைகளில் நாகரிகமும் கலாச்சாரமும் பயணித்த போது தேங்கி நின்று விட்டது. ஆனால் நம் தமிழ் மொழி, மனிதன் அறிய முற்பட்ட ஒவ்வொரு துறையையும் தன்னகத்தே வைத்து அறிவை போதித்தது. தமிழன் அவன் கண்ட அனைத்திலும் தமிழையே கண்டான்; தமிழால் கண்டான்!அரசியல், கலை, பக்தி, காதல், விஞ்ஞானம் என்று நாகரிகம் வளர வளர ஒவ்வொரு துறையிலும் தமிழை வளர்த்தான். அனைத்து துறைகளும் வளர வளர புதிய சொற்களை உருவாக்கி தமிழையும் சேர்த்தே வளர்த்தான். தற்போது நிகழும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியில் தமிழைப் பாதுகாக்க, புதிய சொற்கள் உருவாக்கப் படவேண்டும். பல முன்னெடுப்புகள் இதை நோக்கி நிகழ்வது, தமிழன் தன் மொழி வளர்க்க எடுக்கும் முயற்சியின் தற்கால வடிவம்.

ஆகவே, நாம் அறிவது என்னவென்றால் ஒரு மொழியின் வளர்ப்பு என்பது தொடர் ஓட்டம் போல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சி மொழிக்கு அவசியமாகின்றது. நம் முன்னோர்கள் அவர்கள் காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து தமிழை விடுவித்து, இப்போது நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நாம் இப்போது நிகழும் தொழில்நுட்ப புரட்சியில், தமிழை முன்னிலைப் படுத்த உறுதி அளிப்போம். தமிழை இளமையாக, செழுமையாக வளர்த்தெடுப்போம்!

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu