தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை - சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியா மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேலே வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 […]

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்னிந்தியா மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேலே வளிமண்டல கீழ் அடுக்கில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களிலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளில் அடுத்த 2 நாட்களிலும் கனமழை வாய்ப்பு உள்ளது. பொதுவாக, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும். - இவ்வாறு வானிலை மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu