கடந்த 11 வர்த்தக நாட்களாக டாடா குழுமத்தின் பங்குகள் சரிவடைந்து வந்தன. இந்த நிலையில், இன்று சரிவிலிருந்து மீண்டு, கிட்டத்தட்ட 5% அளவுக்கு உயர்ந்துள்ளன.
டாடா குழுமம் சார்பில் ஐபிஓ வெளியிடப்படுவதாக இருந்தது. இது ரத்தாவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு, டாடா குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்தன. இந்த நிலையில், அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் ஏகப்பட்ட ஐபிஓ களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக டாடா குழுமம் அறிவித்தது. இந்த செய்தி வெளியான பிறகு, டாடா குழும பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன. டாடா கேப்பிட்டல், டாடா ஆட்டோகம்ப் சிஸ்டம்ஸ், டாடா பேசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி, பிக் பாஸ்கட், டாடா டிஜிட்டல், டாடா எலக்ட்ரானிக்ஸ், டாடா ஹவுஸிங், டாடா பேட்டரிஸ் ஆகிய நிறுவனங்களில் ஐ பி ஓ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.