டாடா குழுமத்தின் லாபகரமான நிறுவனம் - டிசிஎஸ் ஐ முந்திய டாடா மோட்டார்ஸ்

May 16, 2024

டாடா குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், டாடா குழும நிறுவனங்களுக்குள் லாபப் போட்டி நிகழ்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே, டிசிஎஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் டாடா குழும நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி அதிக லாபமீட்டும் டாடா குழும நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் முதல் இடத்தை அடைந்துள்ளது. கடந்த காலாண்டில், […]

டாடா குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், டாடா குழும நிறுவனங்களுக்குள் லாபப் போட்டி நிகழ்ந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே, டிசிஎஸ் நிறுவனம் அதிக லாபம் ஈட்டும் டாடா குழும நிறுவனமாக இருந்து வந்தது. தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி அதிக லாபமீட்டும் டாடா குழும நிறுவனமாக வரலாறு படைத்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் முதல் இடத்தை அடைந்துள்ளது.

கடந்த காலாண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17483 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 12434 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, டிசிஎஸ் ஐ பின்னுக்குத் தள்ளி டாடா மோட்டார்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஆனாலும், வருடாந்திர லாபத்தை கணக்கிட்டால், டி சி எஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu