டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக, செவ்வாயன்று இந்த பங்கு 2.5% சரிந்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் பிளாக் டீலில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த விலை வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணம், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான யுபிஎஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகளை விற்பனை செய்ய பரிந்துரைத்தது தான். மேலும், நிறுவனம் தனது மின்சார வாகனங்கள் மற்றும் பிற கார்களின் விலையை குறைத்திருப்பதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விலை குறைப்பு, நிறுவனத்தின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது. இதன் காரணமாகவே, டாடா மோட்டார்ஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.