வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தனது வணிக வாகனங்களின் விலைகளை 2% வரை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வருவாய் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் பயணிகள் வாகனம் மட்டுமல்லாது வணிக வாகனங்களை அதிக அளவில் தயாரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில், தனது வணிக வாகனங்களின் விலைகளை 3% வரை உயர்த்தியது. இந்த நிலையில், நேற்று ,ஏப்ரல் 1 முதல் மேலும் 2% அளவுக்கு வணிக வாகன விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களாக பிரிந்து செயல்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி ஓரிரு நாட்களில், வணிக வாகனங்கள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.