சூரிய எரிசக்தி நிலையம் அமைக்க டாடா பவர் - சானியோ நிறுவனங்கள் ஒப்பந்தம்

August 31, 2023

மகாராஷ்டிரா மாநிலத்தில், புதிய சூரிய எரிசக்தி நிலையம் அமைப்பதற்காக, டாடா பவர் மற்றும் சானியோ நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. டாடா பவர் நிறுவனத்தின் புத்தாக்க எரிசக்தி பிரிவு, சானியோ ஸ்பெஷல் ஸ்டீல் மேனுஃபாக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 28.125 மெகாவாட் திறனில், சூரிய எரிசக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் எரிசக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதில், 61.875 மில்லியன் யூனிட் மின்சாரம் ஒவ்வொரு […]

மகாராஷ்டிரா மாநிலத்தில், புதிய சூரிய எரிசக்தி நிலையம் அமைப்பதற்காக, டாடா பவர் மற்றும் சானியோ நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டாடா பவர் நிறுவனத்தின் புத்தாக்க எரிசக்தி பிரிவு, சானியோ ஸ்பெஷல் ஸ்டீல் மேனுஃபாக்சரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, 28.125 மெகாவாட் திறனில், சூரிய எரிசக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் எரிசக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதில், 61.875 மில்லியன் யூனிட் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வருடத்திற்கு 42534 டன் அளவில், கார்பன் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இணைந்தது குறித்து இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu