19 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் டாடா குழுமத்தின் ஐபிஓ

August 14, 2023

சுமார் 19 ஆண்டுகள் கழித்து டாடா குழுமத்திலிருந்து ஐபிஓ வெளிவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக செயல்படும் டாடா டெக்னாலஜிஸ், இந்த ஐபிஓ வை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஐபிஓ வெளியாகும் என கூறப்படுகிறது. அண்மையில், இதற்கான ஒப்புதலை நிறுவனம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஓ மூலம், 9.57 கோடி பொது பங்குகளை நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இது […]

சுமார் 19 ஆண்டுகள் கழித்து டாடா குழுமத்திலிருந்து ஐபிஓ வெளிவர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக செயல்படும் டாடா டெக்னாலஜிஸ், இந்த ஐபிஓ வை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஐபிஓ வெளியாகும் என கூறப்படுகிறது. அண்மையில், இதற்கான ஒப்புதலை நிறுவனம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐபிஓ மூலம், 9.57 கோடி பொது பங்குகளை நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகள் அளவில் 23.6% ஆகும். மேலும், நிறுவன விதிமுறைகளுக்கு இணங்க, டாடா மோட்டார்ஸ் 8.21 கோடி பங்குகளை அல்லது 20% பங்குகளை வெளியிட உள்ளது. மேலும், ஒரு பங்கு விலை 280 முதல் 320 ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu