கடந்த 2022 ஆம் ஆண்டு, இந்தியாவின் தேயிலை உற்பத்தி உயர்ந்துள்ளதாக இந்தியா தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், ஒட்டுமொத்தமாக, 136.5 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வட இந்திய மாநிலங்களில் 113.33 கோடியும், தென்னிந்திய மாநிலங்களில் 232 கோடியும், தேயிலை உற்பத்தி கிலோ கணக்கில் பதிவாகியுள்ளது.
கடந்த 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 9.32 கோடி கிலோ அளவில் தேயிலை உற்பத்தி பதிவாகியுள்ளது. இதுவே, 2023 ஜனவரி முதல் மார்ச் வரையில், 7.9 கோடி கிலோ அளவில் மட்டுமே தேயிலை உற்பத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைந்ததற்கு, முறையற்ற பருவநிலை சூழல் மற்றும் தேயிலைக்கான தேவை குறைந்துள்ளது ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தேயிலைக்கான தேவை குறைந்து வருவதால், தேயிலை உற்பத்தி தொழில் பின்னடையும் அபாயம் உள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அச்சம் தெரிவித்துள்ளது.