இஸ்ரேல் ஹெச்பி நிறுவனத்தில் 100 பேர் பணி நீக்கம்

February 22, 2023

உலக அளவில், கணினி மற்றும் பிரிண்டர் தயாரிப்பில் ஹெச்பி நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இஸ்ரேல் பிரிவில் பணியாற்றி வரும் 100 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அண்மையில் ஹெச்பி நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் பிரிண்டிங் துறையில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 2600 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதத்தில், 4000 முதல் 6000 பேரை உலகளாவிய முறையில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக […]

உலக அளவில், கணினி மற்றும் பிரிண்டர் தயாரிப்பில் ஹெச்பி நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இஸ்ரேல் பிரிவில் பணியாற்றி வரும் 100 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அண்மையில் ஹெச்பி நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக, டிஜிட்டல் பிரிண்டிங் துறையில் பணி நீக்கம் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 2600 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதத்தில், 4000 முதல் 6000 பேரை உலகளாவிய முறையில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக ஹெச்பி நிறுவனம் அறிவித்தது. இந்த நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு வரை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இஸ்ரேல் பணி நீக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எதிர்கால மாற்றத்திற்கு நிறுவனத்தை தயார் செய்யும் நடவடிக்கையாக இஸ்ரேல் பணி நீக்கம் இருக்கும் என்று ஹெச்பி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் மூலம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.4 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் மறு கட்டமைப்புக்கான செலவுகள் 1 பில்லியன் டாலர் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu