மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நூற்றுக்கணக்கானோர் பணி நீக்கம்

September 13, 2024

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் 650 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் 3 வது பெரிய பணி நீக்கம் ஆகும். சுமார் $69 பில்லியன் மதிப்பில் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பில் ஸ்பென்சர் தலைமையிலான மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஜனவரி மாதம் 1,900 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் நிறுவனத்தைச் […]

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் 650 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் 3 வது பெரிய பணி நீக்கம் ஆகும். சுமார் $69 பில்லியன் மதிப்பில் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பில் ஸ்பென்சர் தலைமையிலான மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜனவரி மாதம் 1,900 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இது தவிர, மே மாதம், $7.5 பில்லியன் மதிப்புள்ள ZeniMax ஒப்பந்தத்தில் இருந்து 4 ஸ்டுடியோக்களை மைக்ரோசாப்ட் மூடியது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, சோனி, டேக்-டூ மற்றும் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் போன்ற பிற முன்னணி விளையாட்டு நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu