கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருடாந்திர மொத்த வருவாய் 17.91% உயர்ந்துள்ளதாக TRAI அமைப்பு தெரிவித்துள்ளது. வருவாய் மதிப்பு 60530 கோடி ரூபாயாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு, 51335 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக, ஜியோ நிறுவனம், அரசுக்கு 21515.88 கோடி ரூபாய் வருவாயை பங்களித்துள்ளது. அடுத்ததாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் 17140.56 கோடியும், வோடபோன் நிறுவனம் 7356.54 கோடியும் பங்களிப்பு வழங்கியுள்ளன. இந்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 2177.95 கோடி ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. ஏஜிஆர் அடிப்படையில் அரசாங்கத்தின் வருவாய் பங்கீடு 19% உயர்ந்து, 6843 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 1999 கோடி ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கான கட்டணமாகவும், 4844 கோடி உரிமத்திற்கான கட்டணம் ஆகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.