பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியில்லை

April 13, 2024

பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருப்பினும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த மாநில கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தெலுங்கானாவில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இருப்பினும் 2018 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் அடுத்த மாதம் 13-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் ஜூலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu