போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்காலிக வாபஸ்

January 11, 2024

போக்குவரத்து ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை பண்டிகை காலத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் […]

போக்குவரத்து ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில் போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை பண்டிகை காலத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் வேலை நிறுத்தம் அவசியமா? இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டுமா எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் ஜனவரி 19ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu