2025-2026 ஆம் கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பத்து பாடங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டு முதல் 9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020- இன் படி 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் தேர்வுக்கான பாடங்களின் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி […]

உத்தரபிரதேச மாநிலத்தில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டு முதல் 9,10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020- இன் படி 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் தேர்வுக்கான பாடங்களின் எண்ணிக்கை 6 இல் இருந்து 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் மூன்று மொழிகளில் பாடங்களை கற்க வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்த பங்குதாரர்களிடம் வாரியம் ஜூன் 29ஆம் தேதிக்குள் ஆலோசனை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கையின்படி 2025-2026 முதல் 9ஆம் வகுப்பிலும், 2026-2027 முதல் 10-ம் வகுப்பிலும் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியில் மொத்த மதிப்பெண்கள் 600 மதிப்பில் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள் இறுதித் தேர்வதற்கு 80 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்கள். இந்த புதிய பாடத்திட்ட மாற்றங்களுடன் தர நிர்ணயம் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் வினாத்தாளின் வடிவம் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu