அரசு போக்குவரத்து கழகத்திற்காக 2200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில் திமுக அரசு 85 சதவீத வாக்குகளை நிறைவேற்றி உள்ளது. அதில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளிக்கு அனுமதி இல்லை என்று அறிவித்து உள்ளது. மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் திங்கட்கிழமை வரை ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திற்கு ஏற்கனவே 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது 850 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மாதந்தோறும் 200 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2200 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவை தவிர தமிழகத்திற்கு புதிதாக 7200 பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்