குற்றால அருவி அருகில் உள்ள கடைகளில் தீ விபத்து

August 26, 2023

குற்றால அருவி அருகே தீ விபத்து ஏற்பட்டதில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் இருந்து குற்றால அருவி வரை சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பழக்கடைகள், ஹோட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், ஃபேன்ஸி பொருட்கள் போன்ற பல்வேறு கடைகள் போடப்பட்டுள்ளன. இங்கு நேற்று மதியம் தற்காலிக கடைகளில் அருகில் உள்ள கோவிலில் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். இதில் திடீரென தீப்பொறி அருகில் இருந்த கடையில் விழுந்தது. இது […]

குற்றால அருவி அருகே தீ விபத்து ஏற்பட்டதில் 50 கடைகள் எரிந்து சேதம் அடைந்தது.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் இருந்து குற்றால அருவி வரை சுமார் 50 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பழக்கடைகள், ஹோட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், ஃபேன்ஸி பொருட்கள் போன்ற பல்வேறு கடைகள் போடப்பட்டுள்ளன. இங்கு நேற்று மதியம் தற்காலிக கடைகளில் அருகில் உள்ள கோவிலில் சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். இதில் திடீரென தீப்பொறி அருகில் இருந்த கடையில் விழுந்தது. இது மளமளவென பற்றி எரிந்தது. பலமாக காற்று வீசியதால் அங்குள்ள மற்ற கடைகளிலும் தீ பரவியது. இதனால் டீக்கடைகள் ஹோட்டல்களில் இருந்த சுமார் 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

தீ விபத்தை பற்றி அறிந்த தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சுரண்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்தனர். இதில் சுமார் 50 கடைகளில் ரூபாய் 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் தீயில் கருகின. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
எரிந்து முற்றிலுமாக சேதம் அடைந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu