ஒவ்வொரு நாளும் 7 மணி நேரம் நடந்தால் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது. அதில் ஒவ்வொரு நாளும் 7 மணி நேரம் நடந்தால் 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு 5' 7 முதல் 5'11 வரை உயரம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அறிவியல் சாதனங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மனிதனைப் போன்ற ஹியூமனாய்டு ரோபோக்களை டெஸ்லா தயாரிக்கிறது. அதற்கு மனிதர்கள் செய்யும் காரியங்களை பழக்கப்படுத்தி வருகிறது. அந்த ரோபோவுக்கு மனிதர்களின் செயல்பாடுகளை சொல்லித் தருவதே இந்த வேலையின் நோக்கமாகும். அந்த வகையில் அசைவுகளை பிரதி எடுக்கும் மோஷன் கேப்சூல் சூட் உடை மற்றும் vr ஹெட்செட் அணிந்து கொண்டு நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரம் நடக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் அந்த அசைவுகளை ரோபோ கற்றுக் கொள்ளும். டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவில் இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்படுகிறது.