6 பேர் அமரும் டெஸ்லா வாகனம் - 2025 ல் உற்பத்தி

September 3, 2024

டெஸ்லா, அதன் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனமான மாடல் Y இன் ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், புதிய திட்டம் தீட்டியுள்ளது. 6 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீனாவில் ஆறு இருக்கைகள் கொண்ட பதிப்பை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. டெஸ்லாவின் ஆறு இருக்கைகள் கொண்ட பதிப்பு, நியோ மற்றும் ஜீக்ர் போன்ற சீனாவின் உள்ளூர் போட்டியாளர்களுக்கு எதிராக களமிறக்கப்படும். ஜனவரி-ஜூன் மாதங்களில் சீனாவில் 207,800 […]

டெஸ்லா, அதன் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனமான மாடல் Y இன் ஈர்ப்பை அதிகரிக்கும் வகையில், புதிய திட்டம் தீட்டியுள்ளது. 6 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர உள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீனாவில் ஆறு இருக்கைகள் கொண்ட பதிப்பை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

டெஸ்லாவின் ஆறு இருக்கைகள் கொண்ட பதிப்பு, நியோ மற்றும் ஜீக்ர் போன்ற சீனாவின் உள்ளூர் போட்டியாளர்களுக்கு எதிராக களமிறக்கப்படும். ஜனவரி-ஜூன் மாதங்களில் சீனாவில் 207,800 யூனிட்கள் விற்பனையுடன், சிறந்த விற்பனையாகும் காரான டெஸ்லாவின் மாடல் Y, "ஜூனிபர்" திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu