தாய்லாந்து பட்டாசு ஆலை விபத்தில் 23 பேர் பலி

January 18, 2024

தாய்லாந்தில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் பலியாகினர். தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 ஊழியர்கள் பலியாகினர். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை முற்றிலுமாக அழிந்தது. இந்த சம்பவம் நடந்த போது சுமார் 30 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்தனர். இந்த தகவல் குறித்து அறிந்த உடன் தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

தாய்லாந்தில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் பலியாகினர்.

தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 ஊழியர்கள் பலியாகினர். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை முற்றிலுமாக அழிந்தது. இந்த சம்பவம் நடந்த போது சுமார் 30 ஊழியர்கள் அங்கு பணியில் இருந்தனர். இந்த தகவல் குறித்து அறிந்த உடன் தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் தீயை போராடி அணைத்தனர். இதுவரை 23 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பலரது உடல்கள் சிதறியதால் அடையாளம் காண இயலவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் சீன புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu