தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் தொடரில் சாத்விக் - சிராஜ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சாத்விக் - சிராஜ் ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது. இதில் சாத்விக் - சிராஜ் ஜோடி ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 21 - 15, 21- 15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது