750 ரூபாய் சுற்றுலா வரி வசூலிக்க தாய்லாந்து திட்டம்

September 19, 2024

தாய்லாந்தின் புதிய சுற்றுலாத்துறை அமைச்சர் சொராவோங் தியெந்தோங், நாட்டின் சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலா வரியை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளார். சுற்றுலா வரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் தாய்லாந்து அரசு தனது சுற்றுலா வருவாயை 3 டிரில்லியன் பாட்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று நம்புகிறது. கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பதவியேற்ற […]

தாய்லாந்தின் புதிய சுற்றுலாத்துறை அமைச்சர் சொராவோங் தியெந்தோங், நாட்டின் சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சுற்றுலா வரியை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளார். சுற்றுலா வரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம் தாய்லாந்து அரசு தனது சுற்றுலா வருவாயை 3 டிரில்லியன் பாட்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரி விதிப்பு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று நம்புகிறது.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி பதவியேற்ற சொராவோங் தியெந்தோங், விமான பயணிகளிடம் இருந்து 300 பாட் மற்றும் தரைவழி அல்லது கடல் வழி பயணிகளிடமிருந்து 150 பாட் வசூலிக்க திட்டமிட்டுள்ளார். சிறு குழந்தைகள், போக்குவரத்து துறை சார்ந்த பயணிகள், தூதர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. பிரான்ஸ், ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பூட்டான் போன்ற பிற நாடுகளும் இதே போன்ற சுற்றுலா வரியை வசூலித்து வருகின்றன. பூட்டானில் ஒரு நாளைக்கு 100 டாலர் சுற்றுலா வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu