தாய்லாந்து பிரதமர் பதவிநீக்கம் - நீதிமன்றம் உத்தரவு

August 14, 2024

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவசின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மந்திரி சபையில் கடந்த ஏப்ரல் மாதம் பிச்சித் சைப்பான் என்பவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். எனவே அவரை மந்திரி ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிச்சித் சைப்பான் தனது […]

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவசின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மந்திரி சபையில் கடந்த ஏப்ரல் மாதம் பிச்சித் சைப்பான் என்பவர் மந்திரியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். எனவே அவரை மந்திரி ஆக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பிச்சித் சைப்பான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவரை பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் தவிசினை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மந்திரி சபை உறுப்பினர்களை அவர்களுடைய தகுதி அடிப்படையில் நியமனம் செய்யும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும் பிரதமர் தவிசினை அந்த நடத்தை விதிகளை மீறி விட்டார் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. அதோடு பிச்சித் சைப்பான் நன்னடத்தை இல்லாதவர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை காபந்து அமைச்சரவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu