கஞ்சாவை மீண்டும் சட்டவிரோதமாக்க தாய்லாந்து பரிசீலனை

May 9, 2024

கஞ்சாவை மீண்டும் சட்ட விரோதமாக அறிவிப்பது குறித்து தாய்லாந்து பரிசீலனை செய்து வருகிறது. கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து. ஆனால் தற்போது மீண்டும் சட்ட விரோதமாக அறிவிப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, கஞ்சா விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் தற்போது இங்கு இல்லை. இதனால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கஞ்சாவால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே கஞ்சாவை மீண்டும் தடை செய்யப்பட்ட […]

கஞ்சாவை மீண்டும் சட்ட விரோதமாக அறிவிப்பது குறித்து தாய்லாந்து பரிசீலனை செய்து வருகிறது.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய முதல் ஆசிய நாடு தாய்லாந்து. ஆனால் தற்போது மீண்டும் சட்ட விரோதமாக அறிவிப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, கஞ்சா விநியோகத்தை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள் தற்போது இங்கு இல்லை. இதனால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கஞ்சாவால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. எனவே கஞ்சாவை மீண்டும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களின் பட்டியலில் சேர்ப்பதற்கும், இதனை மருத்துவத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உறுதி செய்யும் வகையில் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் ஆணையிட்டுள்ளேன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டது. இதன் மூலம் நலிவுற்ற விவசாயிகள் கஞ்சா பயிரிட்டு வளம் பெற முடியும் என்று கருதப்பட்டது. இதன் பயன்பாடு மருத்துவத்திற்கு மட்டுமே இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் கஞ்சா கட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே இந்த சூழலில் அதனை சட்டவிரோதமாக்குவது குறித்து பிரதமர் ஆலோசித்து வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu