தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத் துறை, முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளை பிதுக்கி தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.
அமலாக்கத்துறை, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 13-ம் தேதி இரவு கைது செய்தது. வரும் 28-ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில், மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சில விளக்கங்களைக்கேட்டு இந்த பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.