தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு

April 16, 2024

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் நாளை மாலை 6:00 மணியுடன் ஓய்வு பெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் சத்தியபிரதா சாகு நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் அரசு அலுவலர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் இரண்டு அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு தேர்தல், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் […]

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழகத்தில் நாளை மாலை 6:00 மணியுடன் ஓய்வு பெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சத்தியபிரதா சாகு நிருபர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில் அரசு அலுவலர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் இரண்டு அலுவலர்களை மட்டும் பணி அமர்த்த தேர்தல் கமிஷன் சிறப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு தேர்தல், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் இரண்டு அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் வாக்குப்பதிவு அன்று ஏதேனும் தனியார் நிறுவனம் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவில்லை எனில் மாவட்ட எஸ்டிடி கோடை சேர்த்து 1950 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டி சட்டசபை எம்எல்ஏ மரணம் காரணமாக தொகுதி காலியாக உள்ளது. இது குறித்த முடிவை தேர்தல் கமிஷன் எடுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. எனவே தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது என தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் எவ்வித பிரச்சாரத்திற்கும் அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu