தூத்துக்குடியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

March 26, 2024

முதலமைச்சர் மு க ஸ்டாலின் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனல் தெரிவிக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் நேற்று நெல்லை,கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளாங்குலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அங்கு இருந்து தூத்துக்குடி சென்றார். பின்னர் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள […]

முதலமைச்சர் மு க ஸ்டாலின் கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார்

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனல் தெரிவிக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் நேற்று நெல்லை,கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளாங்குலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அங்கு இருந்து தூத்துக்குடி சென்றார். பின்னர் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்கா சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து வாக்கு சேகரித்தார். பின்னர் தொடர்ந்து அவர் நடை பயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று அங்கிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைவரிடமும் நலம் விசாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu