டெல்லி புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பதற்கான தேதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.
டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் அவருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு, டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அவர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது