அதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அமலாக்க துறையினர் குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியில் எட்டு ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இவர் மீது குட்கா முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது வீடுகளில் சோதனை செய்து பல்வேறு ஆவணங்களை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் அடிப்படையில் இன்று சோதனை நடைபெறவதாக தெரியவந்துள்ளது.