தமிழகத்தில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு

March 27, 2024

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இதற்கான வேட்பு மனு […]

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ், பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். மேலும் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. அதன்படி வேட்பு மனு தாக்கல் 20 முதல் 27ஆம் தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். மேலும் இறுதி வேட்பாளர் பட்டியல் இம்மாதம் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu