தமிழகத்தில் புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனால் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது சுமார் 2,40,000 குடும்பங்கள் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் புதிய காடுகள் வழங்கும் சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக இதுவரை கார்டுகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஆய்வு பணிகள் தொடங்கி புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளன.