வியட்நாம் அதிபர் டூ லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வியட்நாமில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நுயென் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் வியட்நாம் அதிபர் டூ லாம், கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், 2021 முதல் வியட்நாமின் அதிபராக இருக்கும் டூ லாம், தற்போது கட்சியின் மிகச் சிறந்த அதிகாரப்பூர்வப் பதவியைப் பெறுகிறார். இவர் 40 வருடங்களுக்கு மேல் பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணி புரிந்து உள்ளார். பின்னர் 2016 இல் மந்திரியாக பொறுப்பு ஏற்றார். அதன் பின்னர் வியட்நாம் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.