இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார். மேலும், இந்தியாவும் எகிப்தும் ஆழமாக வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் நட்புறவை கொண்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.