தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் இதற்கு முன்னதாக 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் 30 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்னும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. நேற்று முதல் பயணிகளின் வசதிக்காக 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முன்பதிவு செய்வதற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.