குமரியில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

September 22, 2023

குமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று காரணமாக அங்கு கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் 10 கடற்கரை கிராமங்களை […]

குமரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று காரணமாக அங்கு கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் நேற்று கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10,000-க்கு மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் தங்களது சொந்த நாட்டு படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu