ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில், வால்மிகி சமூகத்தினர் முதன்முறையாக தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். நேற்றைய வாக்குப்பதிவில், மாலை 7 மணியுடன் 65.58% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தேர்தலில் உதம்பூரில் 72.91% அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன, அதேபோல் சம்பாவில் 72.41%, கத்துவாவில் 70.53%, ஜம்முவில் 66.79% மற்றும் பந்திபோராவில் 64.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது.