நாளை 2025 -2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில், 2025-26ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (31ம் தேதி) தொடங்குகிறது. தொடக்க நாளில், பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்றுவார், அதன்பின் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த பட்ஜெட் பிப்ரவரி 1-ந்தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முதன்மை விவாதங்கள் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்களில் மக்களவையில் நடைபெறப்போகின்றன, மற்றும் மேல்சபையில் மூன்று நாட்கள் நடைபெறும்.