மேற்கு வங்காள அரசு பெண்களின் பாதுகாப்புக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம், பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழுவை அமைப்பதாக அறிவித்தது. இந்நிலையில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில், 'ராத்திரேர் ஷாதி' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், நகரங்களில் முழு சிசிடிவி கண்காணிப்பு, நைட் ஷிப்ட் பணிக்கு பாதுகாப்பு, மற்றும் பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்குவது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் சோதனைகள் நிச்சயமாக்கப்படும்.